திருச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு சிறப்புக் கூட்டம்: மேயர் ஆலோசனை

திருச்சி மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Mosquitoes den.jpg

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்துவது தொடர்பாக மேயர் மு. அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெயாநிர்மலா மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று(நவ.1) நடைபெற்றது.

Advertisment

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தெரிவித்ததாவது, "திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலகளில் உள்ள 65 வார்டுகளிலும், ஏற்கனவே, தலா 50 போ் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டும் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநகராட்சிப் பணியாளா்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். களப்பணிக்கு வரும் சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டிலோ, வீட்டின் சுற்றுப் புறத்திலோ டயா், தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண்பானைகள், பிளாஸ்டிக் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீா் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

Advertisment
Advertisements

 Mosquitoes den1.jpg

வீடுகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீா் தொட்டிகளையும், பாத்திரங்களையும் நன்கு மூடி பராமரிக்க வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை  பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு அபிவிருத்தியாகிறது.

எனவே, ஏ.டி.எஸ் கொசுப் புழு வளராமல் அனைவரும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது.  கொசுப் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் உள்ள தண்ணீா் தொட்டி மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை கீழே கொட்டி கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும்.

தண்ணீா் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடா், சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீணான பொருள்களான பிளாஸ்டிக் டப்பா, டயா், உடைந்த குடங்கள் போன்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கொசு ஒழிப்பு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் மாநகராட்சி சாலைகள், கால்வாய்கள் முறையாக சுத்தப்படுத்தப்படாத நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அதேபோல், கொசு ஒழிப்பு திரவங்களின் தன்மை வீரியம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: