திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா மரணம்; காங்கிரஸ் பிரபலங்கள் நேரில் அஞ்சலி

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சுஜாதா உடல்நலக்குறைவால் மரணம்; காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் திருச்சி வருகை

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சுஜாதா உடல்நலக்குறைவால் மரணம்; காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் திருச்சி வருகை

author-image
WebDesk
New Update
trichy former mayor sujatha

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சி மாநகராட்சியின் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தவரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான எஸ்.சுஜாதா இருதய கோளாறு காரணமாக திருச்சி புத்தூர் அருகே உள்ள சுந்தரம் மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது இறப்புக்கு திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுஜாதா திருச்சி மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சுஜாதா மறைவுக்கு காங்கிரஸ் பிரபலங்கள் மற்றும் தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சி பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Advertisment
Advertisements

இவரது இறுதிச் சடங்கு நாளை காலை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெற இருக்கின்றது. இவரது துக்க நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

க.சண்முகவடிவேல்

Congress Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: