திருச்சி மாநகராட்சி கூட்டம்: தி.மு.க கவுன்சிலர் தர்ணா; டெண்டர் முறைகேடு குறித்து எதிர்ப்பு

மேயர் அன்பழகன், இதற்குப் பின்னணியில் நீங்கள் இல்லை என்றால், நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்போம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமதாஸ் வேண்டுமென்றால் என் மீது புகார் கொடுங்கள் என மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

மேயர் அன்பழகன், இதற்குப் பின்னணியில் நீங்கள் இல்லை என்றால், நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்போம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமதாஸ் வேண்டுமென்றால் என் மீது புகார் கொடுங்கள் என மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

author-image
WebDesk
New Update
Trichy Corporation meeting DMK councilors hold dharna protest over tender irregularities Tamil News

மண்டல குழு தலைவர் மதிவாணன் (தி.மு.க), பழைய பால்பண்ணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

Advertisment

அப்போது மேயர் அன்பழகன், "ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ அனைத்தும் இங்கு பிடிக்கிறார்கள். மருத்துவ செலவு முழுவதுமாக ஏற்கப்படுகிறது. மேலும் ஒரு மாதம் வரை வேலை செய்ய விட்டாலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது." என்றார். அதற்கு, தி.மு.க கவுன்சிலர் முத்து செல்வம், "திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கழிப்பிடம் டெண்டரில் மாநகராட்சிக்கு ரூ. 13 லட்சம் கூடுதலாக கிடைத்தது. ஆனால், அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டரில் ரூ.3 லட்சம் மட்டுமே கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஆகவே சத்திரம் பஸ்நிலையம் சைக்கிள் ஸ்டாண்ட் ரீ டெண்டர் விட வேண்டும்." என்று கோரினார். 

அப்போது மேயர் அன்பழன், "ஏற்கனவே கொடுத்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, ரீ டெண்டர் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பு"? எனக் கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் முத்து செல்வத்திற்கும், மேயர் அன்பழகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து முத்து செல்வம் ரீடண்டர் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாபோராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

Advertisment
Advertisements

அப்போது முத்து செல்வத்துக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ராமதாஸ் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் போது, ஏன் ரீட் டெண்டர் விடக்கூடாது? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆணையர் மதுபாலன், "சந்தை மதிப்பை ஆய்வு செய்து மீண்டும் ரீ டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர் ராமதாஸ், "குடிநீர் இணைப்புகள் சரியாக வழங்கப்படாததால் பொதுமக்கள் தாங்களாகவே குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்." என்றார். 

அப்போது மேயர் அன்பழகன், இதற்குப் பின்னணியில் நீங்கள் இல்லை என்றால், நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்போம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமதாஸ் வேண்டுமென்றால் என் மீது புகார் கொடுங்கள் என மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உங்கள் இருக்கையில் அமர்வதற்கு உங்களுக்கு தகுதி இல்லை எனக் கூறினார். இதனால் கோபமடைந்த மேயர் இவரை வெளியேற்றுங்கள்.
இரண்டு மாதத்துக்கு இவர் கூட்டத்தில் பங்கேற்க தடைவிதித்து சஸ்பெண்ட் செய்து, கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமதாஸ் பின்னர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டல குழு தலைவர் மதிவாணன் (தி.மு.க), பழைய பால்பண்ணை பகுதியில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது. இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். கோ.கு.அம்பிகாபதி (திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க தலைவர்), பஞ்சப்பூர் பஸ் நிலையம் கட்டுவதற்கு குளத்தை நிரப்புவதற்கே ரூபாய் 17 கோடி நிதி மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால், இப்போது பெரியார் சிலை, லாரிமுனையம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை சமன் செய்வதற்கு பொது நிதியில் இருந்து இவ்வளவு எதற்காக செலவழிக்க வேண்டும். ஆனால் நான் ஏர்போர்ட்டில் ஒரு தெருவிளக்கு போட வேண்டும் என்றால் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே முறையான சிக்னல் அமைத்து விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டுக்கு உட்பட்ட பசுமை நகரில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு மேயர் அன்பழகன், "நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். இவ்வாறு விவாதம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி: க. சண்முகவடிவேல்.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: