Advertisment

வீட்டிற்கு மேல் உயர்மின் கம்பி; தொழிலாளி மரணம்; உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

திருச்சியில் வீட்டிற்கு மேல் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் தொழிலாளி மரணம்; உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

author-image
WebDesk
New Update
Trichy electrician died

திருச்சியில் வீட்டிற்கு மேல் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் தொழிலாளி மரணம்; உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

திருச்சி வடக்கு காட்டூர் பகுதி சேர்ந்த கட்டிட தொழிலாளி டேவிட் ரீகன் என்பவர், திருச்சி கருமண்டபம் நியூ ஆல்பா நகரில் உள்ள ஒரு விட்டிற்கு வேலை பார்க்க சென்றிருந்தார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது டேவிட் ரீகன் மீது எதிர்பாராத விதமாக கட்டிடத்திற்கு மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பி உரசியதில் தூக்கி எறியப்பட்டு டேவிட் ரீகன் பரிதாபமாக இறந்தார். மேலும் இரண்டு தொழிலாளிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

   இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் விரைந்து சென்று டேவிட் ரீகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன டேவிட் ரீகனுக்கு மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.

   இந்தநிலையில், மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி ரீகன் சாவு விகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உயர் மின்சார கம்பிகளுக்கு கீழ் வீடு கட்ட முறைகேடாக கட்டிட அனுமதி வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

   4 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் விபத்தில் உயிர்விட்ட கட்டிட தொழிலாளி ரீகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ரீகன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக்கோரி, திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் உள்ள டேவிட் ரீகன் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி செல்வன், பா.லெனின், ரேணுகா ஆகியோர் தலைமையில் டேவிட் ரீகனது உறவினர்களும் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

   இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், அரசு அதிகாரிகள் வருகை தந்த பிறகு நாங்கள் கிளம்புகின்றோம் எனக்கூறி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment