திருச்சி சரக காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி உத்தரவு

பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்; திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவு

பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்; திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவு

author-image
WebDesk
New Update
Trichy DIG Manohar

திருச்சி சரக டி.ஐ.ஜி மனோகர்

திருச்சி சரகத்தில் உள்ள காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Advertisment

அந்தவகையில், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாரிமன்னனை இ.பி. விஜிலென்சுக்கும், மங்களமேடு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமலதா மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் வேலுசாமி அரியலூர் காவல் நிலையத்திற்கும்,பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாட்ஷா பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் காவல் ஆய்வாளர் குணமதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேற்கண்டவாறு காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவிட்டுள்ளார்.

க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Police Inspector

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: