/indian-express-tamil/media/media_files/2024/12/22/YCbn9Is8c17gFyluYg3v.jpg)
திருச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு, சம்மந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதனால், சம்மந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் (RDO) அலுவலகத்தினை அணுகுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.