க.சண்முகவடிவேல்
Trichy: திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை தமிழக முதல்வர் திருச்சி வரவிருக்கிறார். அதனை முன்னிட்டு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்திருப்பது பின்வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 25.01.2024 மற்றும் 26.01.2024 ஆகிய இரண்டு தினங்கள் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே, 25.01.2024 மற்றும் 26.01.2024 ஆகிய இரண்டு தினங்களில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“