Trichy District Tasmac Leave On February 5th Collector Order திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு | Indian Express Tamil

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

திருச்சியில் ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைக்களுக்கும், பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 5-ந் தேதி திருச்சியில் ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைக்களுக்கும், பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

திருச்சியில் வரும் பிப்ரவரி 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL1) மூடப்பட்டிருக்கும்.

அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy district tasmac leave on february 5th collector order