Trichy DMK finalise seat sharing with ally: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65 வார்டுகளைக் கொண்ட திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளைக் கேட்ட நிலையில், 4 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை அந்தந்த கட்சிகளின் அந்தந்த மாவட்ட தலைமைகளை தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், திருச்சி மாநகராட்சிக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு தலைமையில், மாவட்டச் செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்டச் செயலர்கள் காடுவெட்டி என்.தியாகராஜன், வைரமணி, எம் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, 51 வார்டுகளில் திமுக போட்டியிடுவதாகவும், மீதமுள்ளவை கூட்டணி கட்சிகளுக்கு பகிரப்படும் என்றும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் நேரு தெளிவான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். மேலும், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மேயர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த திமுக முடிவு செய்துள்ளதால், அறுதிப் பெரும்பான்மையைப் பெற திமுக முடிந்தவரை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும் அமைச்சர் நேரு கூறினார்.
இந்த முடிவை மற்ற கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்ட நிலையில், காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டு வருகிறது. முந்தைய கவுன்சில்களில் ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சிக்கு குறைந்தபட்சம் 12 இடங்களில் போட்டியிடுவது கண்ணியமானதாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் பரிந்துரைத்தனர்.
இருப்பினும், திமுகவின் இந்த முடிவை கூட்டணி கட்சி பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, திமுக 51 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களிலும், ஐ.யு.எம்.எல்., மற்றும் ம.ம.க.வுக்கு தலா ஒரு இடத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே இறுதி வேட்பாளர் பட்டியலை ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட தேர்தல் குழுவை திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது
இது தொடர்பாக, தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மூலம் ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர, திமுக போட்டியிடும் இடங்களை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் உயர்மட்டக் குழுவுக்கு அனுப்புமாறு திமுக மாவட்ட செயலாளர்கள் அல்லது மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், வி.சி.க.,வுக்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திந்து வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil