திருச்சி திமுகவின் கோட்டை என மறைந்த முதல்வர் கலைஞர் அவ்வப்போது கூட்டங்களில் பேசிடுவார். அந்த அளவுக்கு திருச்சி திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் ஒற்றுமை இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திருச்சிக்கு தலைமை அனுப்பி பொறுப்பு கொடுத்ததில் இருந்து பல்வேறு உட்பூசல்கள் எழுந்து வந்தது.
இதனையடுத்து ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டம் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு திமுகவின் 15-வது உள்கட்டமைப்பு தேர்தலும் நடைபெற்று மாவட்ட செயலாளர்களாக அன்பின் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் வெற்றி வாகை சூடினர்.
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயலாளராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதும் கடந்த 13 வருடங்களாக திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்ததில்லை.
திருச்சியில் செயற்குழு பொதுக்குழு, மாநாடு நடந்துள்ள நிலையில் மீண்டும் 1989- காலகட்ட அரசியலை திருச்சியில் தீரர்கள் கோட்டம் என நிருபிக்க மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு, பொதுகுழு மட்டுமல்ல மாவட்ட திமுகவின் கடைகோடி தொண்டனும் கலந்துகொள்ளும் வகையில் மாநாடு போல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அறிவுறுத்தியதன் பேரில் திருச்சி டவுன் ஸ்டேஷன் ரோடு, மகாராணி தியேட்டர் அருகில் ஆனந்தா அவென்யூ, சந்தான வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறுகின்றது.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள திமுக அடிப்படை தொண்டர்கள் பங்கேற்கும் கூட்டம் வரும் 06.11.22-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி மதிவாணன் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்
தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகுத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். மாநகர செயலாளர் மண்டல தலைவர் மதிவாணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், அவை தலைவர் கோவிந்தராஜன், பொருளாளர் குணசேகரன், மாவட்ட நிர்வாகி அ.த.த. செங்குட்டுவன், வன்னை அரங்கநாதன், துணை மேயர் திவ்யா, பகுதி செயலாளர்கள் ஏ.எம்.ஜி. விஜயகுமார், மணிவேல், தர்மராஜ், ராஜ் முகம்மது, மோகன், நீலமேகம், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், கருணாநிதி, மாரியப்பன், ராஜேந்திரன், கருணாகரன், பழனிசாமி உட்பட நகர கழக நிர்வாகி சந்திரமோகன், பைரவன் உட்பட பகுதி ஒன்றிய நகர கழக செயல்வீரர்கள், வட்ட கழக செயலாளர்கள் செயல்வீரர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி மாணவர் அணி தொமுச, மாநகராட்சி மண்டல மாமன்ற உறுப்பினர்கள், கலை இலக்கிய அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வழக்கறிஞர் அணி மருத்துவர் அணி வர்தகர் அணி உட்பட அனைத்து கட்சி செயல்வீரர்கள், வீராங்கனைகள் என சுமார் 7,000-ம் பேருக்குமேல் பங்கேற்க உள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட கார்கள், 3000-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பங்கேற்க உள்ள பொதுகூட்ட திடல், பந்தல், தொன்டர்களுக்கு உரிய அடிப்படை வசதி உணவு வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்டவை குறித்து மாநகர செயலாளர் மதிவாணன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
செயல்வீரர்களின் கூட்டத்திற்கு பல்லாயிரக் கணக்கானோர் வருவர் என்பதால் பாதுகாப்பு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படா வண்ணம் இருக்க பல்வேறு கள ஆய்வுகளை மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு ஆய்வு செய்தார்.
துணை ஆணையர் வழிகாட்டுதல்படி உதவி ஆணையர்கள் நிவேதாலெட்சுமி, சுந்தரமூர்த்தி உட்பட காவல்துறை, ஆய்வாளர்கள் தயாளன். சுகுமார் உட்பட ஆய்வாளர்கள் - உதவி ஆய்வாளர்கள் சிறுப்பு உதவி ஆய்வாளர்கள் - காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
13 வருடத்திற்கு பின்பு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் ஆனதும் நடத்தும் முதல் கூட்டம் மிக பிரம்மாண்டமாக தீரர்கள் கோட்டம் திருச்சி என்பதை மெய்பிக்கும் வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மசோதா, நீட் தேர்வு விலக்கு பூத்கமிட்டி அமைத்து / பாராளுமன்ற தேர்தல் வெற்றி இலக்கு என பல்வேறு திட்டங்கள் தீர்மாணங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு தலைமை கழகத்தின் கட்டளையை தொடர்ந்து இக்கூட்டத்தில் பொது உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
இது செயல்வீரர்கள் கூட்டமா. தெற்கு மாவட்ட மண்டல மாநாடா என அரசியல் பார்வையாளர்கள் வியக்கும் வகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மிக சிறப்பாக' எழுச்சியாக நடைபெற உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.