தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் தி.மு.க சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (ஜன.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/01/07/cbKWYKCqRc7B5TOEtDlA.jpeg)
அதன்படி, திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல், திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/01/07/4oP4VehVZR2Gzr6ONqx4.jpeg)
திருச்சியில் இரண்டு இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் மாநகராட்சி மேயர் அன்பழகன், தி.மு.க மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மதிவாணன் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த கவிஞர் சல்மா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்