/indian-express-tamil/media/media_files/11zTcfqt4zXABZg63vbA.jpg)
Trichy DMK woman councilor attacked
திருவெறும்பூர் அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக திமுக பெண் கவுன்சிலரை செருப்பால் அடித்த பிரியாணி கடை உரிமையாளரை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வஉசி நகரை சேர்ந்தவர் சரவணன், இவரது மனைவி ஜெயந்தி (32). இவர் துவாக்குடி நகராட்சியின் ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.
துவாக்குடி அண்ணா வளைவு அக்பர் சாலையில் பிரியாணி கடை மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவருக்கும், ஜெயந்திக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
ஜெயந்தி, முகமது இலியாஸிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதாகவும் அதற்கு இலியாஸ் பணத்தை தர மறுத்ததோடு, ஜெயந்தியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும் துவாக்குடி அண்ணா வளைவில் பொது இடத்தில் வைத்து இலியாஸ் தான் அணிந்து இருந்த செருப்பை கழட்டி ஜெயந்தியை தாக்கியதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து ஜெயந்தி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது இலியாசை தேடி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us