திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, தொகுதி பொறுப்பாளர்கள் எம்பி ராமலிங்கம், அரசு கொறடா கோவி.செழியன் எம்எல்ஏ, தொகுதி பொறுப்பாளர்கள் சந்திரசேகர், உத்திராபதி, துரைராஜ் கவுன்சூர் காஜாமலை விஜி, முத்துச்செல்வம், மாநில மாணவர் அணி அமைப்பாளர் பி.எம்.ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில்
முன்னாள் முதல்வரும், தமிழின தலைவருமான கலைஞரின் நூற்நாண்டு விழாவினை திருச்சி மத்திய, வடக்கு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அனைத்து அணிகள் சார்பிலும், சிறப்பாக, நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.
நடைபெற விருக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் கழக உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்கும் வகையில் அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக சேர்ந்திட விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விரைவில் அந்தந்த சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும்
இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமான அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தினை கொண்டு வந்து அதை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது எனவும், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, ஏழை எளிய மகளிர்க்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை கொண்டு வந்து மகளிர் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் ரூ.1000-ம் வரவு வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி புதிதாக வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் வருகின்ற 04.11.2023, 05.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவிருக்கின்றது. இம்முகாமில் நம் கழகத்தினர் அனைவரும் தவறாது பங்கேற்று புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் பணிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“