விருப்ப ஓய்வு கேட்ட திருச்சி டி.எஸ்.பி... பணியில் ஏற்பட்டுள்ள மன உளைச்சல்தான் காரணமா?

மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனை தொடர்ந்து, திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாஸ், "பணியில் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக தனக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டும்" என்று உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
dsp resigns

திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வை.பரத் ஸ்ரீனிவாஸ். இவர் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலவில்லை. ஆகவே, எனக்கு விருப்ப ஓய்வு அளித்து உதவிடுமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனை தொடர்ந்து, திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாஸ், "பணியில் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக தனக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டும்" என்று உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு;

Advertisment

திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வை.பரத் ஸ்ரீனிவாஸ். இவர் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலவில்லை. ஆகவே, எனக்கு விருப்ப ஓய்வு அளித்து உதவிடுமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக உள்துறை செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: நான் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1997-ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தேன். படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு 2-ல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக என்னால் தொடர்ந்து பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் நான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். 

அவருக்கு தனிப்பட்ட காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா? அல்லது அவருக்கு மேல் அதிகாரிகள் யாரும் டார்ச்சர் கொடுத்தார்களா? என்பது முழுமையாக தெரியவில்லை. அவரது இந்த முடிவு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: