Advertisment

திருச்சியில் உள்ள 9 மீட்பு யானைகளை சாடிவயல் முகாமிற்கு மாற்ற முடிவு - சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் தகவல்

திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 9 யானைகள் சாடிவயல் யானைகள் முகாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் செயலர் சுப்பிரியா சாஹூ தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
திருச்சியில் உள்ள 9 மீட்பு யானைகளை சாடிவயல் முகாமிற்கு மாற்ற முடிவு - சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் தகவல்

திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 9 மீட்பு யானைகளை வேறு நல்ல இடத்திற்கு மாற்றம் செய்ய தமிழ்நாடு வனத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான இடத்தை கண்டறிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற இடங்களை வனத்துறை கூடுதல் செயலர் சுப்பிரியா சாஹூ, தலைமை வனக்காவலர் சீனிவாச ரெட்டி, ராமசுப்பிரமணியம், வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் வந்த குழுவினர் கோயம்புத்தூர் சாடிவயல் யானைகள் முகாமை பார்வையிட்டனர். அங்கு யானைகள் வளர்க்க தேவையான சூழல் உள்ளதா என ஆய்வு செய்து அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் சுற்றுலா பணியாளர்களிடம் கலந்துரையாடிய அவர், அவர்களது குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

publive-image

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரியா சாஹூ தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் சாடிவயல் பகுதியில் உள்ள யானைகள் முகாமை ஆய்வு செய்ததில் இங்கு யானைகள் வாழ நல்ல சூழல் உள்ளது. யானைகள் இருக்க இயற்கையான சூழல், இடவசதிகள், தண்ணீர் வசதிகள் மற்றும் வனத்துடன் ஒட்டியுள்ள சூழல் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர் இங்கு 75 சதவீதம் அனைத்து வசதிகளும் உள்ளது எனவும், 25 சதவீத சில பணிகளை மட்டும் செய்யப்பட வேண்டும் என்றார்.

மேலும் யானைகள் அதிகளவு வாழக்கூடிய பகுதி என்பதால், இரண்டு ஆறுகள் உள்ளது, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி என இந்த சூழல் யானைகள் வசிக்க தேவையான சூழல் உள்ளதாக கருதுவதாக தெரிவித்தார். மேலும், சூழல் சுற்றுலா பணியாளர்கள் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அரசு பழங்குடி மக்கள் மற்றும் பிற வேட்டைதடுப்பு காவலர்களுகான தொகுப்பு ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க ஆணைகள் வழங்கப்பட உள்ளது. முதல் முறையாக மாநில அளவிளான தீ விபத்துகளை கண்டறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியாக எங்கு தீ விபத்து ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து விரைந்து செல்ல முடியும், அதே போல மாவட்டங்களில் மாவட்ட வன அலுவலர் தலைமையில் இயக்கும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

publive-image

செயற்கைகோள் மூலம் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் தீ விபத்து ஏற்பட்ட பகுதி துல்லியமாக கண்டறியப்படுகிறது. மேலும் மனித- விலங்கு மோதல்கள் பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர் அதனை குறைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், ரேடியோ காலர், செயற்கோள் உதவுடன் கண்காணிப்பது மற்றும் மதுக்கரை பகுதியில் நுண்ணறிவு பிரிவு உதவியுடன் கண்காணித்து வருகின்றோம். வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும், தமிழக சுற்றுலா தளங்களை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் தனி நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது எனவும், அதன் மூலம் 8 இடங்கள் கண்டறியப்பட்டு அதனை ஆய்வு செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார். கோயம்புத்தூரிலும் இரண்டு அல்லது மூன்று சுற்றுலா தளங்கள் மேம்படுத்த உள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் 4 இடங்களில் இப்பணிகளை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Elephant Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment