விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்தம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு- கனகாம்பரம் கிலோ ரூ.2,500-க்கு விற்பனை
கனகாம்பரம் பூ விலை ஒரு கிலோ 800 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகவும்; மல்லிகை 300 ரூபாயில் இருந்து 600 ரூபாயாகவும்; சுகந்தராஜா 100 ரூபாயில் இருந்து 240 ஆகவும் உயர்ந்து உள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் பூ மார்கெட்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என முகூா்த்தம் மற்றும் விநாயகா் சதுா்த்தி பண்டிகை தொடா்ந்து வருவதால், பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. அதற்கேற்ப விலையும் கிடுகிடுவென உயா்ந்துள்ளது. கனகாம்பரம் பூ விலை ஒரு கிலோ 800 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகவும்; மல்லிகை 300 ரூபாயில் இருந்து 600 ரூபாயாகவும்; சுகந்தராஜா 100 ரூபாயில் இருந்து 240 ஆகவும் உயர்ந்து உள்ளது. ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி விலை ரூ.500-க்கும் விற்பனையாகிறது. இதுதவிர வாழை இலையின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை சில நாள்களுக்கு முன்பு வரை ரூ.400 முதல் ரூ.450-வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒருகட்டு இலை ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை விற்பனையாகிறது.