தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்; உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்; உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

author-image
WebDesk
New Update
Trichy tobacco

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்; உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

திருச்சி மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Advertisment

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன், இப்ராஹிம் மற்றும் கந்தவேல் உள்ளிட்டோரைக் கொண்ட குழு திருச்சி, மண்ணச்சநல்லூர் தாலுகா திருவெள்ளரை கிராமத்தில் உள்ள சௌக்கியராஜ் கடையில் சோதனை நடத்தியது. அங்கு சுமார் 1.750 கிராம் புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டது.

அதன் அருகில் உள்ள அலெக்ஸ் ஸ்டோரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்கள் சுமார் 51 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்வதற்காக மூன்று சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் அந்த இரண்டு கடைகளும் உணவு பாதுகாப்பு துறையால் சீல் செய்யப்பட்டது. மேலும், மேல் நடவடிக்கைக்காக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவிக்கையில்; திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து, தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடைகள் சீல் வைக்கப்படும் என்று கூறினார்.

இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை பொதுமக்கள் உணவுபொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழ்க்கண்ட இந்த எண்ணில் (புகார் எண் : 99 44 95 95 95, 95 85 95 95 95., மாநில புகார் எண் : 9444042322) புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: