/indian-express-tamil/media/media_files/2025/01/23/Q8ULGA8aALpwUTwp1Yhp.jpg)
தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் அட்டையை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரத்தினம் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச பஸ்பாஸ் (Free Bus Pass) வழங்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை இலவச பஸ் பாஸ் கிடைக்க, திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்திற்கு மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் பெயர் பட்டியலை வழங்கி, இலவச பஸ்பாஸ் பெற அறிவுறுத்தினார்.
/indian-express-tamil/media/post_attachments/4d27de1f-815.jpg)
அதன்படி, திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்திடமிருந்து முதற்கட்டமாக 252 காவல் ஆளிநர்களுக்கு இலவச பஸ்பாஸ் பெறப்பட்டு, அதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 13 காவல் ஆளிநர்களை நேரில் வரவழைத்து, அவர்களுக்கு இலவச பஸ்பாஸை (Free Bus Pass) திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கினார்.
அதே போல், தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் அட்டையை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரத்தினம் வழங்கினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us