அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய காவல் நிலையம்... கட்டுமான பணியை துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அமைச்சா் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அமைச்சா் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

author-image
WebDesk
New Update
kn nehru

கே.என்.நேரு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

Advertisment

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 1979-ஆம் ஆண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டு அரசு மருத்துவமனை காவல்நிலையம் என்ற பெயரிலேயே இயங்கி வருகிறது. புறக்காவல் நிலைய கட்டடமானது, போதிய இட வசதியில்லாமல் உள்ளது. மேலும், கட்டமும் பழுதாகி ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, காவல்நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடா்பாக, காவல்துறை, மருத்துவமனை நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் தரப்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதைத் தொடா்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, இந்த விழாவில் பங்கேற்று அடிக்கல் நட்டு வைத்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்த புதிய காவல்நிலையமானது ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. தரைத்தளத்துடன் 8 அறைகளுடன் கூடிய கட்டடமாக கட்டப்படுகிறது. 1,520 சதுர அடி பரப்பில் நுழைவு வாயில், வரவேற்பு அறை, காவல் ஆய்வாளா் அறை, காவல்நிலைய நிா்வாக அறை, விசாரணைக் கைதிகள் வைத்திருப்பதற்கான 2 பிரத்யேக அறைகள், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் நவீன காவல்நிலையத்துக்கு தகுந்தபடி கட்டமைக்கப்படுகிறது.

அடிக்கல்நாட்டு விழாவில், ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் என்.காமினி, மாநகராட்சி ஆணையா் வே.சரவணன், காவல் துணை ஆணையா் ஈஸ்வரன், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.குமரவேல், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் உதய அருணா மற்றும் அரசு மருத்துவமனை காவல்நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

க.சண்முகவடிவேல்

Trichy K N Nehru

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: