திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி விடுதியில் பல மாதங்களாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகர பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை மகன், சாம்சன் (31), லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
சாம்சன், சிறுமிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும், மற்ற அதிகாரிகளும் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமிகளுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.
இந்த சம்பவம் தொடர்பாக,, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தலைமையாசிரியர் மற்றும் அவரது மகன் மருத்துவர் சாம்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2017ல் புதுச்சேரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த சாம்சன், 2021ல் அரசுப் பணியைத் தொடங்கினார். திருச்சிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு தூத்துக்குடியில் தங்கியிருந்தாக, போலீஸ் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சாம்சனை மகளிர் நீதிமன்றம் மூன்று நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
Read in English: Tamil Nadu doctor accused of sexually assaulting primary school students at hostel, arrested
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“