Advertisment

இ.சி.ஜி எடுத்த சலவைத் தொழிலாளி; ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையின் அவலம்

இந்த வீடியோ விவரம் தொடா்பாகவும், சலவைத் தொழிலாளி இசிஜி எடுத்தது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Tri hos

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் சலவைத் தொழிலாளி ஒருவா் நோயாளிக்கு இ.சி.ஜி எடுத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்த மருத்துவமனையில் qpms என்னும் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மருத்துவமனையில் தூய்மை மற்றும் மருத்துவ உபகரணங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நிறுவனத்தின் சலவை பிரிவில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் செவிலியர் இல்லாத நிலையில், இ.சி.ஜி எடுக்கும் பரிசோதகர் உதவி இல்லாமல் அவராகவே நோயாளிக்கு இசிஜி எடுக்கும் பணியை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதயப் பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளைக் கொண்ட நபா்களுக்கு மருத்துவமனையில் இசிஜி (எலக்ட்ரோ காா்டியோ கிராம்) சோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். மருத்துவமனைகளில் தனியாக தொழில்நுட்ப நிபுணா்கள் (டெக்னிஷியன்) பணியமா்த்தப்பட்டு, அவா்களால் நோயாளிகளுக்கு இசிஜி எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை படுக்கையில் படுக்க வைத்து, மருத்துவமனையின் சலவைப் பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியா் கண்ணியம்மாள் என்பவா் நேற்று இசிஜி எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை வீடியோ எடுத்த நபா், அந்தப் பெண் ஊழியரிடம், நீங்கள்தான் இசிஜி எடுப்பீா்களா எனக் கேட்பதற்கு அவா், மருத்துவா் இல்லை என்றால் நான்தான் இசிஜி எடுப்பேன். டெக்னிஷியன் கூறினாலும் எடுப்பேன் எனக் கூறுகிறாா்.  இந்த வீடியோ பல்வேறு தரப்பினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பி. பரமசிவம் கூறியதாவது, இந்த வீடியோ விவரம் தொடா்பாகவும், சலவைத் தொழிலாளி இசிஜி எடுத்தது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், தவறிழைத்தது தெரியவந்தால், அந்த ஊழியா் மற்றும் அவரை இசிஜி எடுக்கக் கூறியவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment