திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டு அதற்கான நிறைவு பணிகள் நடைபெற்று வந்தன. இதன் பயன்பாட்டிற்கான தேதி நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
ஆலோசனை, கட்டுமானப் பொறியியல் மற்றும் இயக்கம் ஆகிய துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Egis, விமான நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புக்கான வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகராக ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
75,000 சதுர மீட்டர் பரப்பளவில், புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனைய கட்டிடம் ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமை மதிப்பீடு, நான்கு நட்சத்திர நிலைத்தன்மை மதிப்பீடு மற்றும் ஆண்டுதோறும் 4.5 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
"கோபுரம்" என்ற உள்ளூர் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட parametric மற்றும் வளைந்த கூரையாக திருச்சி சர்வதேச விமான நிலையம் விளங்குகின்றது. தங்குமிட வண்ணங்கள் உள்ளூர் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட அலங்கார துத்தநாக டைட்டானியம் உறைப்பூச்சு ஆகும். Loung'ன் உட்புறம் மற்றும் கலைப்படைப்பு உள்ளூர் கோயில் கட்டிடக்கலை மரபுகள் மற்றும் கலாச்சார சுவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்திற்கு ஒரு அழகியல் தோற்றத்தை வழங்குவதற்காக பல வண்ணங்களில் false ceiling வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறங்களில் தரையமைப்பு வடிவங்கள் வரவேற்பு அடையாளமாக பாரம்பரிய கோலம் வடிவத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த பயணிகள் முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தபோது, திருச்சி சர்வதேச விமான நிலையத்தை Egis வெற்றிகரமாக டெலிவரி செய்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் ஜூன் 11-ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து புதிய விமான நிலையம் முனையத்தின் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் அதற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து வருகிற 11-ந் தேதி காலை 6 மணி முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விமான நிலையத்தில் அலுவலகங்கள், விமான நிறுவனத்தின் அலுவலகங்கள், தீயணைப்பு துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அலுவலகம் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“