க.சண்முகவடிவேல்
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி, திருச்சியில் நடை பயிற்சி சென்றபோது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அதில் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்போவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 13 ரவுடிகளுக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
13 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஜெயக்குமார், வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் தென்போவன் என்கிற சண்முகம் என்ற ரவுடியை தவிர எஞ்சிய 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். இதனால், 12 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவ சோதனை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி ஜே.எம் 6 நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு டிஎஸ்பி மதன்குமார் மற்றும் ரவுடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து கலைவாணன், தினேஷ், லெப்ட செந்தில், சிவா (எ) குணசேகரன், ராஜ்குமார்,தீலிப், லட்சுமி நாராயணன். ஆஜராகினர். இன்று சீர்காழி சத்யராஜ், சுரேந்தர் ஆகிய ரவுடிகளின் வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராவில்லை. பின்னர் மாலை 5.30 அளவில் நீதிபதி சிவகுமார் 12 ரவுடிகளுக்கும் இரண்டு மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது எப்படி?
உண்மை கண்டறியும் சோதனை என்றழைக்கப்படும் 'Narco Analysis' சோதனையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் உடலுக்குள் மயக்க மருந்தை செலுத்துவதன் மூலம் அவரின் கற்பனைத் திறனை மட்டுப் படுத்தி, மனதை அறை மயக்க நிலைக்கு கொண்டு சென்று, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவோ அல்லது வழக்கின் கண்டு பிடிக்கப்படாத ரகசியங்களை அறிந்து கொள்ளவோ மேற்கொள்ளப்படும் முயர்ச்சிதான் இந்த உண்மை கண்டறியும் சோதனை.
உலகம் முழுக்க பல்வேறு மயக்க மருந்துகள் இந்த சோதனைக்கு பயன் படுத்தப்பட்டாலும், இந்தியாவில் "சோடியம் பென்டத்தால்", "சோடியம் அமிட்டால்" போன்ற மயக்க மருந்துகளே உண்மை கண்டறியும் சோதனைக்கு பயன் படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே சம்பந்தப்பட்டவர் அறை மயக்க நிலைக்கு சென்றுவிடுவார். அதிலும் சோடியம் பென்டத்தால் அதி வேகமாக செயல்படும். நம் கனவுகள், கற்பனைகள், புனைவுகள் என மூளையோடு தொடர்புடைய அனைத்துமே நமது கற்பனைத்திறனால் உருவாவை.
சோடியம் பென்டத்தால் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே மருந்து செலுத்தப்பட்டவரின் கற்பனைத்திறன் மட்டுப்படுத்தப் படுகிறது. இப்போது அவர் அறை மயக்க நிலைக்கு சென்று விடுகிறார். அவரால் தானாக முன் வந்து எதுவும் பேச முடியாது.
பிரெய்ன் மேபிங் (Brain maping):
இது போலத்தான் p-300 என்றழைக்கபப்டும் பிரெய்ன் மாப்பிங் (Brain Mapping) அல்லது பாலிகிராப் (Poly Graph test) சோதனைகள். உண்மை கண்டறியும் சோதனையின் தவிர்க்க முடியாத இன்னொரு சோதனையாக மூளையையும் இதயத்தையும் பகுத்தறியும் இந்த சோதனையும் இன்று நடைபெறுகிறது. குற்றம்சாட்டப்பட்டவரின் இதயப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் வயர்கள் மூளையின் அதிர்வலைகளை உணரும் தன்மை கொண்டவை. இது கணிப்பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும் கொலையுண்ட நபரின் குரலையோ புகைப்படத்தையோ குற்றம் சாட்டப்பட்டவரிடம் காட்டினால் அவரது மூளையில் அது p-300 என்னும் அதிர்வலைகளை வெளிப்படுத்தும்.
பின் விளைவுகள்:
செலுத்தப்படும் மருந்துகள் இதயத்துடிப்பின் வேகத்தை, ரத்த நாளங்களின் ஓட்டத்தை, முதுகெலும்பின் வலுவை, இவை எல்லாவற்றையும் விட மூளையின் செயல்பாட்டை சோர்வடையச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த மருந்துகள் கொடுக்கப்படும் போது பரிசோதனைக்கு உள்ளாபவரின் வயது, உடல் நிலை, ரத்த அழுத்தம் என எதிலொன்றிலும் கவனக் குறைவாக இருந்தால் மயக்க நிலைக்கு சென்றவர் மீண்டும் நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவும் ஆபத்தும் உண்டு. அப்படியே நினைவு திரும்பினாலும் மருந்தின் பின் விளைவுகளை அவர் காலா காலத்துக்கும் அனுபவிக்க நேரிடும் என்ற நிலையிலும் சந்தேகத்திற்கு இடமான குற்றச்சாட்டுக்கு ஆளான 12 நபர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தாமே முன் வந்தனர் என்றாலும் நேற்று மாலை வரை ஏழு நபர்கள் மட்டுமே ஆஜராகினர்.
இதனையடுத்து, சென்னை அல்லது பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.