Advertisment

திருச்சி நகைக் கொள்ளையர்கள் வாக்குமூலம் - பீதியில் தமிழ், தெலுங்கு நடிகைகள்

அப்போது பேசி முன்பணமாக 6 லட்சம் கொடுத்தோம். பைனான்ஸ் பிரச்சனையால் அந்த நடிகைக்கு முழுத் தொகையை கொடுக்க இயலவில்லை. இதனால் அந்த நடிகை கோர்ட்டுக்கு போனார். அந்த பிரச்சனை நீடித்து வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trichy lalitha jewellery robbery murugan suresh actress - திருச்சி கொள்ளையர்களிடம் நெருக்கமாக இருந்த நடிகைகள் யார்? - லிஸ்ட் தயாரிக்கும் காவல்துறை

trichy lalitha jewellery robbery murugan suresh actress - திருச்சி கொள்ளையர்களிடம் நெருக்கமாக இருந்த நடிகைகள் யார்? - லிஸ்ட் தயாரிக்கும் காவல்துறை

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற நகைக் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரதான குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட முருகன் உள்ளிட்ட சிலரை போலீஸார் துரிதமாக கைது செய்தனர்.

Advertisment

லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை தொடர்பாக நேற்று திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த 28 கிலோ நகைகள் திருட்டு சம்பவத்தில் இதுவரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. முருகனை விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகைக்கடை கொள்ளையில் நேரடியாக 3 பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு காவல்துறையினரும் இந்த வழக்கில் விசாரணை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்தனர். முருகனை விசாரித்த பிறகே நகைகள் முழுவதும் மீட்கப்படும்" என்றார்.

இந்தநிலையில் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்த சுரேஷிடம் திருச்சி கோட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி திருச்சி தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் கூறியபோது, சுரேஷை விசாரித்தபோது சில விஷயங்கள் தெரிய வந்துள்ளன. முருகன் கொள்ளையடித்த பணத்தில் சினிமா தொழிலில் முதலீடு செய்யலாம் என்று நினைத்துள்ளார். இதற்காக ஐதராபாத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்றும் கூறியுள்ளார். தெலுங்கு பட உலகில் சிலரை சந்தித்த போது, அதிகமாக சம்பளம் கேட்டதால் சுரேஷையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

சுரேஷ் மேலும் கூறும்போது, ஆத்மா என்ற படத்தை எடுக்கும்போது பைனான்ஸ் பிரச்சனையால் படம் பாதியில் நின்று விட்டது. பின்னர் மான்சா என்ற படம் தயாரிக்க திட்டமிட்டு ஒரு நடிகையை சந்தித்தபோது அந்த நடிகை 50 லட்சம் கேட்டார். அப்போது பேசி முன்பணமாக 6 லட்சம் கொடுத்தோம். பைனான்ஸ் பிரச்சனையால் அந்த நடிகைக்கு முழுத் தொகையை கொடுக்க இயலவில்லை. இதனால் அந்த நடிகை கோர்ட்டுக்கு போனார். அந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

மீண்டும் பணத்தை தயார் செய்து படம் எடுப்பதற்காக பல முன்னணி தமிழ் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது ஒரு தமிழ் நடிகையை ஐதராபாத்தில் நானும், முருகனும் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், தான் பிஸியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது சில நகைகளை காண்பித்து, நாங்கள் நகைக்கடை வைத்துள்ளோம் என்றதும், அப்படியா என்றவர் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்.

எங்களிடம் நெருங்கி பழகியதால் அந்த நடிகைக்கு முருகன் நகைகளை பரிசாக அளித்தார். அந்த நடிகையும் மறுக்காமல் மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டார். அதிலிருந்து நாங்கள் தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நெருக்கமாக பழகினோம்'' என்று தெரிவித்துள்ளான்.

முருகன், சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் கொள்ளையர்கள் என்று தெரியாமல், நகைக்கடை அதிபர் என்று நம்பி நகையை பரிசாக பெற்று அவர்களிடம் பழகிய நடிகைகளை லிஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் போலீசார். அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர்கள் கொடுத்த நகைகளை பரிசாக பெற்றது பற்றி விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். முருகனையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் சுரேஷ் சொன்னது உண்மையா என்று தெரிய வரும் என தனிப்படை போலீஸ்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment