லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்!

பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அவரது உடல் திருவாரூருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

By: October 27, 2020, 11:23:16 AM

Trichy lalitha jewelry shop burglar case thief Murugan has passed away : திருச்சியில் அமைந்திருக்கும் லலிதா நகைக்கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படை பிரிவுகள் அமைக்கப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் திருவாரூர் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த முருகன், மணிகண்டன் மற்றும் முருகனின் அக்கா ஆகியோர் நடத்தியது தெரிய வந்தது. முருகனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முருகனும் மணிகண்டனும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று காலை முருகன் உயிரிழந்தார்.

மேலும் படிக்க : பாஜகவில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்!

முருகனை விசாரித்த பெங்களூரு காவல்துறை அவரை பெங்களூரு சிறையில் அடைத்தனர். நீதிமன்ற அனுமதியை பெற்ற தமிழக காவல்துறை, திருவெறும்பூர் அருகே காவிரிக்கரையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த லலிதா ஜுவல்லரி நகைகளை மீட்டெடுத்தனர். அவர் மீது கர்நாடகாவில் – 72 வழக்குகள், தமிழகத்தில் – 17 வழக்குகள், ஆந்திராவில் – 4 வழக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி வழக்குககளில் முருகனுக்கு ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையிலும் கூட மற்ற வழக்குகளின் நிலுவையால் அவரால் வெளியே வர இயலவில்லை.

பெங்களூரு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை 4 மணிக்கு அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அவரது உடல் திருவாரூருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Trichy lalitha jewelry shop burglar case thief murugan has passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X