Coimbatore, Madurai, Trichy Updates: செங்கல்பட்டில் தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்

Tamil Nadu News Update: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chengalpat train

புதுக்கோட்டை - ஆவுடையார்கோவிலில் கண்ணன், கார்த்தி சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக 2 சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Jul 25, 2025 21:51 IST

    மாணவர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

    திருநெல்வேலி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மேலப்பிள்ளையார்குளம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாரதி முன்னிலையில், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து, மாணவர்கள் தனது அறியாமையால் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகிறது. மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெண்கள் பாதுகாப்பு இலவச எண்களான 181 மற்றும் காவலன் SOS குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



  • Jul 25, 2025 21:13 IST

    ராமநாதபுரம்: டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் பலி

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு கூவர்கூட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வந்துள்ளனர். அதில் 11 பெண்கள், 2 ஆண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க டிராக்டரில் வந்திருந்தனர். ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், பொதிகுளம் கிராமம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொன்னம்மாள்(60), ராக்கி (65), முனியம்மாள்(65) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

     



  • Advertisment
  • Jul 25, 2025 20:09 IST

    திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணை

    திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு 27.07.2025 முதல் 31.05.2026 வரை, நீரிழப்பு உட்பட மொத்தம் 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்



  • Jul 25, 2025 19:55 IST

    செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது

    சென்னை – செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று இரவு புறப்படும் நிலையில் செங்கல்பட்டில் நிறுத்திவைக்கப்பட்டது. ஓட்டுநரின் கவனக்குறைவால் ரயில் பெட்டி தடம்புரண்டது. ரயில் சக்கரத்தை தண்டவாளத்தில் வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெட்டி தடம்புரண்டதால் ரயில் தாமதமாக புறப்பட வாய்ப்பு உள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jul 25, 2025 19:52 IST

    100 நாள் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார். உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார். முன்னதாக இந்த பயணத்திற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Jul 25, 2025 19:44 IST

    10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .



  • Jul 25, 2025 19:08 IST

    திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: இளைஞர் கைது

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆந்திரா சூலூர்பேட்டையில் வடமாநில இளைஞர் சிக்கியதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியவரும்.



  • Jul 25, 2025 18:29 IST

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது குண்டாஸ்

    நீலகிரி, அரசுப்பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆசிரியர் கோவை மத்திய சிறையில் உள்ள நிலையில் நீலகிரி ஆட்சியரின் பரிந்துரையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் செந்தில்குமார், தற்போது குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jul 25, 2025 18:13 IST

    அம்மனுக்கு சாக்லேட் அலங்காரம்

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள மகா திரிசூலம் பிடாரியம்மன் ஆலயத்தில், ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு கிலோ கணக்கில் சாக்லேட் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன



  • Jul 25, 2025 17:53 IST

    4வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • Jul 25, 2025 16:41 IST

    குழந்தை விற்பனை: 3 பெண்கள் கைது

    திருவள்ளூர், புழல் அருகே குழந்தைகளை விற்க முயற்சித்த 3 பெண்களை கைது செய்து பல்வேறு கோணங்களில் புழல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பெண்களிடம் இருந்த 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 

    கைது செய்யப்பட்ட முக்கிய நபரான வித்யா என்பவரின் செல்போனில் குழந்தைகளின் புகைப்படங்கள் இருந்தது. பெண் குழந்தை என்றால் ரூ.10 லட்சம், ஆண் குழந்தை என்றால் ரூ.15 லட்சம் என பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.



  • Jul 25, 2025 16:33 IST

    பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு - கண்டித்து போராட்டம்

    கன்னியாகுமரியில்  போதையில் இருந்த 4 சிறுவர்கள் பைக்கை அரசுப்பேருந்தில் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் பலியாகினர். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதை கண்டித்து மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை போராட்டத்தில் ஈடுபட்டனர்



  • Jul 25, 2025 14:33 IST

    தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தி.மு.க பிரமுகர் முருகன் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், 8 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.



  • Jul 25, 2025 14:13 IST

    நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் நாளை ஆரஞ்சு அலர்ட்

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களுக்கு, நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 25, 2025 13:41 IST

    மோடி தூத்துக்குடி வருகை எதிரொலி - காவல்துறை முக்கிய அறிவிப்பு

    விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவுக்காக நாளை தூத்துக்குடி வரவுள்ளார் பிரதமர் மோடி. 26.07.2025 மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, தூத்துக்குடி, நெல்லை வழியே செல்ல கனரக, சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகைகுளம் விமான நிலையத்தை கடந்து செல்ல கனரக, சரக்கு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. மாற்று ஏற்பாடாக மங்களகிரி விலக்கில் வலது புறமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிக முக்கிய நபர்களின் வாகனங்ளை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே அனுமதி இல்லை என்று காவல் துறை அறிவித்துள்ளது. 



  • Jul 25, 2025 13:05 IST

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்!

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடியில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல். காரைக்கால், புதுவை உள்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.



  • Jul 25, 2025 12:16 IST

    பாம்பன் துறைமுக அலுவலகத்தில் எச்சரிக்கை

    பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. 



  • Jul 25, 2025 11:53 IST

    தனது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரியில் மரக்கன்று நட்ட ராமதாஸ்

    தனது பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மரக்கன்று நட்டுவைத்தார்.



  • Jul 25, 2025 09:50 IST

    ரேஷன் அரிசி கடத்தல் - அதிகாரிகள் மீது கொலை முயற்சி

    ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற அதிகாரிகள் மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது.  இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்ற அதிகாரிகளை சரக்கு வாகனத்தை விட்டு ஏற்றி கொலை முயற்சி. ஓட்டுநர் உட்பட இருவர் தப்பி ஓடிய நிலையில், இளைஞர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jul 25, 2025 09:49 IST

    ஆன்லைன் டயட் பின்பற்றிய பிளஸ்-2 மாணவன் பலி

    கன்னியாகுமரி அருகே உடல் எடையை குறைக்க `ஆன்லைன் டயட்' முறையை பின்பற்றிய பிளஸ்-2 மாணவன் உயிரிழந்தார். ஆலோசனையின்றி டயட் முறையை பின்பற்றக் கூடாது என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். 



  • Jul 25, 2025 09:48 IST

    புதுக்கோட்டை இரட்டை கொலை - 6 தனிப்படை அமைப்பு

    புதுக்கோட்டை - ஆவுடையார்கோவிலில் கண்ணன், கார்த்தி சகோதரர்கள் படுகொலை கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தது மாவட்ட காவல்துறை. முன்விரோதம் காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: