திருச்சி காந்தி அஸ்தி மண்டபத்தில் நூலகம், ஒலி- ஒளி திரை வேண்டும்; சமூக ஆர்வலர் கோரிக்கை
மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி போதனைகளை கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் நூலகம், ஒலி ஒளி திரை அமைக்க வேண்டும்; சமூக ஆர்வலர் கோரிக்கை
திருச்சி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்திஜி அஸ்தி மண்டபத்தில் நூலகம், ஒலி ஒளி திரை, சுற்றுச்சூழல் பலகையில் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கட்டமைப்பை அமைக்கக்கோரி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர், யோகா ஆசிரியர் விஜயகுமார் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலம் ஈவேரா சாலை அருகே அமைந்துள்ளது. மகாத்மா காந்தி அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும் என்ற செய்தியை பரப்பினார். உண்மையும் நேர்மையும் மகாத்மா காந்தியால் போதிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் நேர்மையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த மகாத்மா காந்தி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும், அன்னாரது வாழ்க்கை மற்றும் கருத்துக்கள் அவசியமாகிறது.
எனவே மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி போதனைகளை கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் நூலகம், ஒலி ஒளி திரை, சுற்றுச்சுவர் பலகையில் வாழ்க்கை வரலாறு படத்துடன் விளக்கக் கருத்துகளை அமைத்திட வேண்டும் எனக்கோரி இன்றைய பொதுமக்கள் மனுநீதி நாள் நிகழ்வில் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil