/tamil-ie/media/media_files/uploads/2023/06/Trichy-accident.jpeg)
திருச்சி மணப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மீது மோதிய கார்; 5 பேர் மரணம்
திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேபோல் திண்டுக்கலிருந்து திருச்சி நோக்கி ஒரு கார் வந்தது. அப்போது வையம்பட்டி அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது.
இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 5 பேரும் ஆண்கள். அவர்களில் மூவர் நாகரத்தினம், ஜயப்பன், முத்துச்செல்வம். மற்ற இருவரின் பெயர் தெரியவில்லை.
இதையும் படியுங்கள்: அதிவேகமாக வந்த கார், பைக் மீது மோதி விபத்து: ஒருவர் பலி; பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சி
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-25-at-19.22.16.jpeg)
அரசு பேருந்து ஓட்டுனர் கார் மோதிய பொழுது இடது புறமாக பேருந்தை ஓட்டியதால், அருகில் இருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-25-at-19.22.16-1.jpeg)
இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.