திருச்சியில் மாநகரில் சூரியனை சுற்றி வட்ட வடிவில் வானவில் தோன்றிய அரிதான காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மழைக்காலங்களில் வானவில் தோன்றுவது என்பது இயல்பான காட்சி. ஆனால் வறண்ட பருவநிலையில் அதுவும் சூரியனை சுற்றி வட்ட வடிவில் வானவில் தோன்றி இருப்பது பொதுமக்களை வியப்படைய செய்துள்ளது. திருச்சி மக்கள் இதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வழக்கம் போல் சிலர் இதுக் குறித்த வதந்திகளையும் பரப்பி விட்டனர்.
திடீரென்று பட்டபகலில் நேற்று மாலை திருச்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூரியனை சுற்றி இந்த வானவில் காட்சி தெரிந்தது. பலரும் இதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இது தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
புகைப்பட கலைஞர் சித்தார்தன் தனது கேமிராவில் எடுத்த அரிதான அபூர்வமான காட்சி இதோ உங்கள் பார்வைக்கு...
/tamil-ie/media/media_files/uploads/2019/09/666-7.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/IMG_20190913_174407233_3-768x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/09/IMG_20190913_174509457_HDR_2-1024x768.jpg)
கடந்த வாரம் கூட திருச்சி மணப்பாறையில் இதுப் போன்ற அரிதான காட்சி தோன்றியது குறிப்பிடத்தக்கது.
photo credits: @S K Siddhartthan