திருச்சி மாநகரில் சில நாட்களாக வழிப்பறி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்த குற்றச்சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இது மட்டும் இன்றி நேற்று ஸ்ரீரங்கத்தில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாநகரில் குற்ற சம்பவம் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல்துறை மீதான நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மாநகர காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/30/0D4Ft66vQkScPRmclvph.jpg)
இந்த நிலையில் நேற்று இரவு (29.01.2025) ஆம் தேதி திருச்சி மாநகரில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 50 இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர ரோந்து வாகன பணிகளில் ஈடுபடும் காவல் ஆளினர்களுக்கு அறிவுறை வழங்கப்பட்டுள்ளது.
அனைவரையும் மன்னார்புரம் ரவுண்டானா அருகில் ஒண்றினைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, காவல் ஆளிநர்களை விழிப்புணர்வுடன் தீவிர ரோந்து செய்தும், திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கினார்.
க.சண்முகவடிவேல்