க.சண்முகவடிவேல்
திருச்சியை மையமாக வைத்து சென்னை - காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில் சேவைகள் பகுதியாகவும், சில ரயில்கள் சில நாட்களுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ரயில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17, 20, 21, 23, 24, 27, 28 மற்றும் மார்ச் 3 ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை-மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளன. பாண்டியன் ரயில், சிலம்பு ரயில் ஆகியவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்:-
பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
I. பிப்ரவரி 16, 17, 19, 23, 24, 26மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) மற்றும் பிப்ரவரி 17, 18, 20, 24, 25, 27 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779)
II. பிப்ரவரி 16, 17, 20, 21, 23, 24, 27, 28 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605). பிப்ரவரி 17, 18, 21, 22, 24, 25, 28 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606).
III. பிப்ரவரி 16, 18, 23, 25 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை சென்னை மஹால் விரைவு ரயில் (22624), பிப்ரவரி 17, 19, 24, 26 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - மதுரை மஹால் விரைவு ரயில் (22623).
IV. பிப்ரவரி 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பிப்ரவரி 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862).
V. பிப்ரவரி 27, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரயில் (22657), பிப்ரவரி 28 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658)
VI. மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628).
VII. மார்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரயில் (12667), மார்ச் 3 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668)
VIII. மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - விழுப்புரம் ரயில் (16868),
ஆகிய அனைத்து ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
I. பிப்ரவரி 10 முதல் மார்ச் 5 வரை சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் அதிவிரைவு ரயில்கள் (22671/22672),திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
II. பிப்ரவரி 17 முதல் மார்ச் 3 வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
III. பிப்ரவரி 16 முதல் மார்ச் 3 வரை மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் பிப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
IV. பிப்ரவரி 9, 16 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - பிகானீர் விரைவு ரயில் (22631), மதுரை - கூடல் நகர் இடையேபகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
V. பிப்ரவரி 23, மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - பிகானீர் விரைவு ரயில் பிப்ரவரி 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பிகானீர் - மதுரை விரைவு ரயில் (22632) ஆகியவை மதுரை - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
VI. பிப்ரவரி 14, 16, 21, 23 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி விரைவு ரயில் (12652) மற்றும் பிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12651) ஆகியவை மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
VII. பிப்ரவரி 28 அன்று புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிரந்தி விரைவு ரயில் (12652), திண்டுக்கல் வரை இயக்கப்படும்.
VIII. பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காச்சிகுடா - மதுரை விரைவு ரயில் (17615) மற்றும் பிப்ரவரி 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - காச்சிகுடா விரைவு ரயில் (17616) ஆகியவை திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
IX. பிப்ரவரி 15, 22 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மும்பை குர்லா - மதுரை விரைவு ரயில் (22101) மற்றும் பிப்ரவரி 17, 24 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - மும்பை குர்லா விரைவு ரயில் (22102) ஆகியவை விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
X. மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (16106) மற்றும் பிப்ரவரி 28 மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ஆகியவை திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
XI. பிப்ரவரி 12, 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பனாரஸ் - ராமேஸ்வரம் (22536), பிப்ரவரி 15, 22 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயில் (22535)ஆகியவைவிழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
XII. பிப்ரவரி 18, 25 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய அஜ்மீர் - ராமேஸ்வரம் ரயில் (20973) மற்றும் பிப்ரவரி 21, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - அஜ்மீர் விரைவு ரயில் (20974) ஆகியவை விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
XIII. பிப்ரவரி 24, 25 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை சிலம்பு ரயில் (20681) மற்றும் பிப்ரவரி 25, 26 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயில் (20682) ஆகியவை காரைக்குடி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
XIV. மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (20691) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (20692) ஆகியவை திருச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
XV. பிப்ரவரி 6 முதல் மார்ச் 4 வரை விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867) மற்றும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 5 வரை மதுரை - விழுப்புரம் ரயில் (16868) ஆகியவை திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
XVI. மார்ச் 1, 2, 3 ஆகியநாட்களில் மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847) மற்றும் மார்ச் 2, 3, 4 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848) ஆகியவை திருச்சி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது
- அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:
I. பிப்ரவரி 23 முதல் 28 வரை மற்றும் மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), பிப்ரவரி 23 முதல் 27 வரை புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிவழியாகசெல்வதோடுமானாமதுரைரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
II. பிப்ரவரி 9 முதல் மார்ச் 1 வரை மற்றும் மார்ச் 5 & 6 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டைஆகியரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
III. பிப்ரவரி 5 முதல் மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - குருவாயூர் ரயில் (16127)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
IV. பிப்ரவரி 9, 12, 16, 19, 23, 26 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டியநாகர்கோவில் - மும்பை ரயில் (16352)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில்நின்று செல்லும்.
V. பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹவுரா ரயில் (12666)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில்நின்று செல்லும்.
VI. பிப்ரவரி 11, 18, 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் (16354)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
VII. பிப்ரவரி 5, 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா - நாகர்கோவில் ரயில் (16353) திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
VIII. பிப்ரவரி 23 முதல் மார்ச் 2 வரை புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 23 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12662)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
IX. பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில் (12632), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (12631)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரைர யில் நிலையத்தில் நின்று செல்லும்.
X. பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை ரயில் (16102) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்
XI. மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் (16824) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேற்கண்டவாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.