ஆட்டோ தொழிற்சங்க மோதல்: அரிவாள் வெட்டு; திருச்சி பஞ்சப்பூரில் பதற்றம், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீஸ்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் தொடர்பான மோதலில், 2 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் தொடர்பான மோதலில், 2 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Auto Union Conflict

ஆட்டோ தொழிற்சங்க மோதல்: திருச்சி பஞ்சப்பூரில் பதற்றம், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீஸ்

திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த, சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல் ஆணையர் காமினி, தலைமையில் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தார்.

Advertisment

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒதுக்குவது தொடர்பாக இரு தொழிற்சங்கங்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது. இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பின்புறமும், மற்ற தொழிற்சங்கங்களுக்கு முன்புறமும் தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டது. எனினும், ஆட்டோ தொழிலாளர்கள் தங்களுக்கு முறையான இடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

மோதல் மற்றும் தாக்குதல்

நேற்றிரவு (29.08.2025), இரு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில், மூவேந்தர் ஆட்டோ தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநபர்களை அழைத்து வந்து, டாக்டர் கலைஞர் ஆட்டோ தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் அருண்குமார், சேக், ராம்குமார் ஆகியோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பார்க்கச் சென்ற அப்துல் ரகுமான் என்ற ஆட்டோ ஓட்டுநரும் எடமலைப்பட்டிப்புதூர் அருகே அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஒரு தரப்பினர் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

Advertisment
Advertisements

தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் ஈஸ்வரன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, காவல் ஆணையர் நேரடியாக களத்தில் இறங்கி, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து இதுபோல பல தொடர் பிரச்சனைகளைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: