திருச்சி மாவட்டத்தில் உள்ள 8.33 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருச்சியில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு தேடி வந்து சேர்ந்ததால் மக்கள் குஷி அடைந்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பொங்கள் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் இன்று காலை காலை 6 மணி முதல் 8 மணி வரை நேரம் நிர்ணயிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 300 நபர்கள் என்ற வீதம் டோக்கன் விநியோகிக்கப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு:

திருச்சியில் நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது எனஅறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதேபோல், இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு டோக்கன்கள் விநியோகம் இன்று முதல் துவங்கியது. வீடுவீடாகச் சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு 300 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். இந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
டோக்கனில் அச்சடிக்கப்பட்டுள்ள நேரத்தின் படி பொதுமக்கள் சென்று அந்த நேரத்தில் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி
திருச்சி மாவட்டத்தில் உள்ள 8.33 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன் இன்று தொடங்கி 8-ம் தேதி வரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”