/indian-express-tamil/media/media_files/exRAmP4I8TMWedB90KFG.jpg)
தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு - திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு
தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு - திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதுகுறித்த விபரம் வருமாறு:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024 (நிட்ஜாம்) கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் நடைப்பெற்றது.
இதில் ஐனவரி 17-ம் தேதி திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடந்த போட்டியில் இருந்து 13 வீரர்- வீராங்கனைகள் தேர்ந்ததெடுக்கப்பட்டனர். அவர்களை திருச்சி மாவட்ட தடகள சங்க செயலர் ராஜூ, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம், பயிற்சியாளர்கள் திருச்சி இருந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
இந்த தடகள போட்டியில் இந்திய முழுவதும் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சாம்பியன்ஷிப்பில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், டிரையத்லான், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகள் என 3 நாட்கள் நடைப்பெற்றது.
இதில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பெண்டாத்தளன் எனும் போட்டியில் கலந்து கொண்ட திருச்சி விளையாட்டு வீரர் அகத்தியன் என்பவர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
பதக்கம் வென்று இன்று திருச்சி திரும்பிய வீரர் அகத்தியன் மற்றும் விளையாட்டு வீரர்களை திருச்சி ரயில்வே நிலையத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக துணை செயலாளர் கனகராஜ், சீனியர் சுரேஷ்பாபு, தம்பிராஜ், ஆரோக்கியராஜ், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என அனைவரும் வரவேற்று மாலை அணிவித்து பாராட்டினர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.