திருச்சிக்கு போதையூட்டிய ராம்ஜி நகர் கஞ்சா: 10 கிலோ பறிமுதல்; 3 பெண்கள் கைது

கஞ்சா பதுக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சிக்கு போதையூட்டிய ராம்ஜி நகர் கஞ்சா: 10 கிலோ பறிமுதல்; 3 பெண்கள் கைது

க.சண்முகவடிவேல்

திருச்சியில் கடந்த சில தினங்களாக போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி சோதனை நடத்தி வரும் போலீசார் இன்று திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் சோதனை நடத்தியபோது சுமார் 10 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மூட்டைகளை கைப்பற்றினர்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தொடர்ந்து ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை ஒழிக்க அதிரடி சோதனையும், வேட்டையும் நடத்தி வருகின்றனர்.  இதில் கடந்த ஒரு மாதமாகவே திருச்சியில் அதிக அளவு ராம்ஜி நகரில் இருந்துதாக் கஞ்சா பொட்டலங்கள் விநியோகிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில். ராம்ஜி நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதில் இன்று (13.08.2022) ராம்ஜி நகர் அடுத்த சின்ன கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கோனார் குளத்தில், சமூக விரோதிகள் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்தது. இதனையடுத்து ஜீயபுரம் காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் பரவாசுதேவன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் அந்தகுளத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது வயல்களிலும், குளக்கரையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். கஞ்சா பதுக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்து மாநகரில் புழக்கத்தில் விட்ட முக்கிய கஞ்சா வியாபாரி வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடிவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy police arrested 3 womens for kanja sale and 10 kg kanja finding

Best of Express