மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்கள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (30.12.2024) திங்கட்கிழமை காலை 09:30 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது.
ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் டெபாசிட் தொகை (முன் வைப்பு தொகை) 2000/- செலுத்தி ஏலம் கோர வேண்டும். ஏலத் தொகையுடன் தனியாக 18% சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜி.எஸ்.டி) செலுத்த வேண்டும். ஏலம் கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திங்கட்கிழமை (30.12.2024)க்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“