Advertisment

முதியோர்களின் குறை தீர்க்க சிறப்பு பெட்டிசன் மேளா; திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு

மூத்த குடிமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண சிறப்பு பெட்டிசன் மேளா; திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Trichy Police commissioner

திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக மூத்த குடிமக்களின் குறைகளுக்கு தீர்வுகாண சிறப்பு பெட்டிசன் மேளா வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது என மாநகர காவல் ஆணையர் சத்யப்ரியா தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள தமிழக முதலமைச்சரிடம் கொடுத்த முதல்வரின் முகவரி மனுக்கள், இணையவழியில் கொடுக்கப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சிரியரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தினந்தோறும் பொதுமக்களிடம் நேரடியாக பெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி கடந்த 6 மாதங்களில் பல சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் (பெட்டிசன் மேளா) நடத்தி பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மலேசிய அரசியல் பிரமுகர் திருச்சியில் மர்ம மரணம்; போலீஸார் தீவிர விசாரணை

அதன்படி, வருகின்ற 14-07-2023 அன்று காலை 10.00 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினிஹாலில் (கலைஞர் அறிவாலயம் அருகில்) திருச்சி மாநகரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பிரச்சனைகளை தீர்க்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் (Senior Citizen Petition Mela) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மூத்த குடிமக்கள் அனைவரும் தங்கள் பிரச்சனை தொடர்பாக காவல் நிலையங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் தற்போது உள்ள தங்களுடைய பிரச்சனை தொடர்பான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட உள்ளது.

எனவே மூத்த குடிமக்கள் தங்களுடைய பிரச்சனை தொடர்பான மனுக்களுடன் வருகின்ற 14-07-2023 அன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினிஹாலில் (கலைஞர் அறிவாலயம் அருகில்) நடைபெற உள்ள சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் (Senior Citizen Petition Mela) கலந்து கொண்டு, தங்கள் மனுக்களுக்கு தீர்வு கண்டு கொள்ள வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் அதுவும் மூத்த குடிமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment