Advertisment

போலீஸ் கேண்டீன் ஐ.டி கார்டு; ஊர்க்காவல் படையினருக்கு வழங்கிய திருச்சி கமிஷ்னர்

காவலர் பல்பொருள் அங்காடியில் ஊர்க்காவல் படையினரும் இனி பொருட்கள் வாங்கலாம்; திருச்சியில் அடையாள அட்டை வழங்கிய கமிஷ்னர்

author-image
WebDesk
New Update
Trichy home gaurd

திருச்சி மாநகரில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் காவலர் பல்பொருள் அங்காடியில் (POLICE CANTEEN) பொருள்களை சலுகை விலையில் காவல்துறையினரைப் போல் ஊர்காவல் படையினரும் வாங்கி பயன்பெற தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

Advertisment

அதன்படி, திருச்சி கே.கே.நகர், ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி மாநகரில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் காவலர் பல்பொருள் அங்காடியில் சலுகை விலையில் பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டையை (POLICE CANTEEN ID CARD) ஊர்காவல் படையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி வழங்கினார்.

இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி ஊர்காவல் படையினர் காவல்துறையினரைப் போலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் (POLICE CANTEEN) குறைந்த விலையில் பொருள்கள் வாங்கி பயன்பெற முடியும் என்பது குறிப்பிடதக்கது.

முன்னதாக, திருச்சி மாநகரில் சிறப்பாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற நான்கு ஊர்காவல் படையினரை பாராட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் வாழ்த்துகளை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும், பணியின்போது உயிர்நீத்த ஊர்காவல் படையை சேர்ந்த வேணுகோபால் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகையை இறந்தவரின் மனைவி ஜெயலெட்சுமியிடம் மாநகர காவல் ஆணையர் ந.காமினி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அரவிந்த், ஊர்காவல்படை ஏரியா கமாண்டர் ராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment