scorecardresearch

திருச்சி காவல் துறையை கலங்கடித்த ராஜஸ்தான் கொள்ளையர்கள்; கமிஷனர் விளக்கம்

நகைகளுக்கு பதிலாக 25 லட்சம் பணம் தருவதாக கொள்ளையர்கள் தந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்களை பொய் புகார் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைக்க முயற்சித்துள்ளனர் கொள்ளையர்கள் – திருச்சி கமிஷ்னர் சத்யபிரியா

திருச்சி காவல் துறையை கலங்கடித்த ராஜஸ்தான் கொள்ளையர்கள்; கமிஷனர் விளக்கம்
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா

நகை கொள்ளை வழக்கு தொடர்பாக, இராஜஸ்தான் சென்ற திருச்சி போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, நடந்த விவகாரம் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: என்.எல்.சி நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை; அமைச்சர் உறுதி

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர், ரத்தன், ராம் பிரசாத், ராமா ஆகிய 4 பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சி போலீசாரை லஞ்ச ஒழிப்பு புகாரில் சிக்க வைக்க திட்டமிட்டதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது;

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை போன 254 சவரன் நகையில் 37 சவரன் மற்றும் 2 லட்சம் பணத்தை ராஜஸ்தானிலிருந்து மீட்டு, விமான நிலையம் திரும்பும்போது மீதமுள்ள நகைகளுக்கு பதிலாக 25 லட்சம் பணம் தருவதாக கொள்ளையர்கள் தந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்களை பொய் புகார் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைக்க முயற்சித்துள்ளனர் கொள்ளையர்கள்.

ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீசார், திருச்சி போலீசாரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் கொள்ளையர்கள் குறித்து உரிய ஆவணங்களை கொடுத்த பின்னர், அவர்கள் ஒப்புதலோடு கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு திருச்சி போலீசார் தற்போது தமிழ்நாடு திரும்பியிருக்கின்றனர் என திருச்சி மாநகர காவல் ஆணையாளர் சத்யபிரியா தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy police commissioner explains rajastan issue