திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 133 கைப்பேசிகளை மாநகர காவல்துறையினா் மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன கைப்பேசிகளை விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் ந.காமினி அறிவுறுத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/a7c49eeb-f75.jpg)
அதன்படி பொதுமக்கள் கொடுத்த புகார்களின்படி, கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணாமல்போன கைப்பேசிகள் பற்றி ஆய்வு செய்ததில் ரூ.22 லட்சம் மதிப்பிலான 133 ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டன.
இதையடுத்து திருச்சி மாநகர கே.கே. நகா் ஆயுதப்படை மைதானக் சமுதாயக் கூடத்தில் அந்தக் கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஒப்படைத்தார்.
க.சண்முகவடிவேல்