Advertisment

போக்குவரத்து வழக்குகள் அதிகம் பதிவானாலும், குறைவான அபராத வசூல் ஏன்? திருச்சி காவல் ஆணையர்

மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு அதிகமாக பதியபடுகிறது, ஆனால், அபராத தொகை குறைந்த அளவே செலுத்தப்படுகிறது – திருச்சி காவல் ஆணையர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy Police

மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு அதிகமாக பதியபடுகிறது, ஆனால், அபராத தொகை குறைந்த அளவே செலுத்தப்படுகிறது – திருச்சி காவல் ஆணையர்

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Advertisment

திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு அதிகமாக பதியபடுகிறது, ஆனால், அபராத தொகை குறைந்த அளவே செலுத்தப்படுகிறது, இதனை மேம்படுத்தவேண்டும். போக்குவரத்து காவலர்கள் வாரத்தில் ஒரு நாள் ஏதாவதொரு வாகனத்தை நிறுத்தி அந்த வாகனத்தின் மீது ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என ஆராய்ந்து, அபராதம் ஏதும் நிலுவையில் இருந்தால் அதனை செலுத்திய பிறகு வண்டியை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

போக்குவரத்து சிக்னல்களை சுத்தமாகவும், சரியான முறையிலும் பாராமரிக்க வேண்டும். பழுதான பேரிகார்டுகளை மாற்றி புதிய பேரிகார்டுகளை பயன்படுத்த வேண்டும். பேரிகார்டில் எந்தவொரு விளம்பர நோட்டிஸ்சும் ஒட்டுவதை போக்குவரத்து காவலர்கள் தடுக்க வேண்டும். திருச்சி மாநகர காவல் சார்பில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். போக்குவரத்து விழிப்புணர்வு முழக்கங்கள் உடைய விளம்பர பலகைகளை மீட்பு வாகனத்தில் நிறுவி திருச்சி மாநகர் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment