/tamil-ie/media/media_files/uploads/2023/08/tricy-police-com.jpg)
ரோந்து சென்றால்தான் குற்றங்கள் குறையும், திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி அறிவுறுத்தல்
திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்படும் போலீசாரின் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐ.பி.எஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள், ரோந்து வாகனங்கள், ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ரோந்து சென்றால் தான் குற்றங்கள் குறையும் என போலீசாரிடம் காவல்துறை ஆணையர் காமினி தெரிவித்தார்.
பின்னர், திருச்சி மாநகர காவல் நிலையங்களில் உள்ள வரவேற்பாளர்களுடன் கலந்துரையாடி, பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த புகார் வந்தாலும் உடனடியாக கணிப்பொறியில் பதிவு செய்து அவர்களது குறைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களிடம், 100-க்கு அழைப்பு வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று புகார்தாரர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ரோந்து செல்வதில் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்வது அவசியமானது. அப்படி ரோந்து செல்வதால் குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் காவல் ஆணையர், மாநகர ஆயுதப்படை காவல் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.