நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 23 ஆம் தேதி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க அரசின் மகளிர் உரிமை தொகை அறிவிப்பை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மிக்கு தொழிற்சாலை ஊழியர் பலி: திருச்சியில் சோகம்
தேர்தல் வாக்குறுதியில் ''தகுதியுள்ள பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் வழங்குவோம்'' என தி.மு.க கூறவில்லை. ஆனால், வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்து தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும்தான் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார்கள். இந்த தகுதியை எதை வைத்து தீர்மானிப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார் சீமான்.
அதனை தொடர்ந்து, 2024 தேர்தலில் பா.ஜ.க.,வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் இதுபோல ஒரு அணியை உருவாக்கினார்கள் ஆனால் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்ததால் அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சீமான் அதே நாளில் நடந்த போராட்டத்தின்போது வன்முறையை தூண்டும் விதமாகவும், அவதூறாகவும் பேசியதாக சீமான் மீதும் நா.த.க ஆதரவாளர்கள் சிலர் மீதும் கன்டோண்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் சீமான் தி.மு.க.,வை பொதுவெளியில் விமர்சித்து வருவது அறிவாலயத்துக்கு தலைவலியை கொடுத்து வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் அதில் இருக்கும் பிழையை தேடி விமர்சிப்பதும், இலவசங்களை கூட தவறாக சுட்டிக்காட்டி மக்களை திசை திருப்பவதாகவும் அவர் மீது தி.மு.க.,வினர் குற்றசாட்டு வைக்கின்றனர்.
முக்கியமாக நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் அதிகம் செல்வதால் அடுத்த தலைமுறையினரின் வாக்குகளை இழக்கும் அபாயமும் திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், 4 தமிழர்கள் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள், ஆகையால் நீங்கள் துணிந்து முடிவெடுங்கள் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். காங்கிரசை கழட்டி விட்டால் ஒரு தொகுதியில் கூட கட்டுத்தொகை வாங்காது. அப்புறம் எதற்காக இப்படி பயப்பட வேண்டும். இந்த ஆட்சியாளர்கள் நம் இன மக்களுக்கு எண்ணற்ற துரோகங்களை செய்து விட்டார்கள். குறிப்பாக திபத்தியர்களுக்கு இந்த நாட்டில் குடியுரிமை கொடுத்திருக்கிறீர்கள், ஆனால் ஈழத்தமிழர்களுக்கு கொடுப்பதில்லை ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், என்ன கொடுமை பாருங்க.. நோய்வாய்ப்பட்டுவிட்டோம், சிகிச்சைக்காக மருத்துவம் செய்வதற்கு சிறைவிடுப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடுகிறார்கள் இஸ்லாமிய சிறைவாசிகள்.. அதுக்கு தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது. கடைசியில் அவர்களின் சிறை விடுதலையை நீக்கிவிட்டது. இந்த இஸ்லாமிய திருமக்கள், இன்னும் நம்புதடா இந்த தி.மு.க.,வை. ஏதாவது நல்லது செய்யுமான்னு இன்னும் நம்புகிறார்கள்.. 'ஏ எப்புட்றா'.. இதை ஒன்னுதான் நமக்கு கேட்க தோன்றுகிறது.. நடக்கிறது எல்லாம் ஒன்னுமே புரியல இன பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரல் ஆகின.
இந்நிலையில், தி.மு.க.,வை தொடர்ந்து தாக்கி பேசி வரும் சீமான் மீது திருச்சி நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில், வன்முறையை தூண்டும் வகையிலும், அவதூறாக பேசியதாகவும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் கீழ்க்கண்ட 143,153,504,506(1) Ipc and 41(6) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. மேலும், சீமானை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தீவிரம் காட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.