New Update
/indian-express-tamil/media/media_files/zQ9pujsVQ0zAYVY1cOjX.jpg)
டாஸ்மாக் பாரில் தகராறில் ஈடுப்பட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
00:00
/ 00:00
திருச்சி எஸ்.பி., வருண்குமார், டாஸ்மாக் பாரில் தரக்குறைவாக நடந்து கொண்ட முருகானந்தம், கார்த்திக், அண்ணாமலை ஆகிய மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
டாஸ்மாக் பாரில் தகராறில் ஈடுப்பட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
க. சண்முகவடிவேல்
Trichy | Tasmac: திருச்சி மாவட்டம், முசிறி கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன், 35. இவர் நேற்று முன்தினம் மதியம், முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது, முசிறியில் பணியாற்றும் முருகானந்தம், அண்ணாமலை, கார்த்திக் ஆகிய மூன்று போலீசாரும் மது அருந்த வந்துள்ளனர்.
முருகானந்தத்துக்கும், சுரேந்திரனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இதனால், மூன்று போலீசாரும் மது குடிப்பதை சுரேந்திரன் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்த போலீஸ்காரர் முருகானந்தம், அவரை தாக்கி, மொபைல் போனை பிடுங்கிச் சென்று விட்டார். காயமடைந்த சுரேந்திரன், முசிறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவலறிந்த திருச்சி எஸ்.பி., வருண்குமார், டாஸ்மாக் பாரில் தரக்குறைவாக நடந்து கொண்ட முருகானந்தம், கார்த்திக், அண்ணாமலை ஆகிய மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு முசிறி அடுத்த தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் சாதிய மோதல் ஏற்பட்டபோது அதை தடுக்க வந்த காவல்துறை வாகனத்தை தாறுமாறாக இயக்கிய போலீசார் ஒருவரால் விபத்து ஏற்பட்டு பல வாகனங்கள் சேதமாயின. பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை மீது அதிருப்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.