Savukku Shankar | தமிழ்நாடு காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப பதியப்பட்டது. இந்த நிலையில் அவர் தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கஞ்சா வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்தப் பேட்டியை யூட்யூப் சேனலில் ஒளிபரப்பிய பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : பத்திரிக்கையாளர் எல்லோருக்கும் என் நிலைதான் ஏற்படும்; வெளியே வந்து விரிவாக சொல்கிறேன்: பெலிக்ஸ்
டெல்லியில் வைத்து அவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து காவல்துறை வாகனம் மூலம் திருச்சிக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சென்ன நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெரால்டு வீட்டில் திருச்சி போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனை ஜெரால்டு அலுவலகத்திலும் நடந்தது.
காவல் ஆய்வாளர் தலைமையில் மொத்தம் 5 போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கை உடைக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது புகார் அளித்துள்ளார்.
சவுக்கு சங்கர் அலுவலகம் மற்றும் அவரின் வீட்டிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“