திருச்சி எஸ்பி-யின் இரவு நேர சோதனை: விடுமுறை கால குற்றங்களைத் தடுக்க புதிய திட்டம்!

விடுமுறை நாட்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் இரவு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விடுமுறை நாட்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் இரவு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-08-16 at 12.33.59 PM

Trichy

சுதந்திர தினம் விடுமுறை தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை இருப்பதால் சுற்றுலா தளங்கள் சொந்த ஊருக்கு செல்வோர் என பொதுமக்கள் அங்கும் இங்கும் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனை அடுத்து திருச்சி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு (Weekend Operation) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிகளில் கூடுதல் காவலர்களை ஈடுபடுத்தி வழக்கமான சோதனையைக் கடந்து தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

WhatsApp Image 2025-08-16 at 12.33.56 PM

அந்த வகையில் நேற்று 15.08.2025 இரவு திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை சமுத்திரம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET கல்லூரி சோதனைச் சாவடி மற்றும் சமத்துவபுரம்,  துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட துவாக்குடி TollPlaza ஆகிய பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், தாமே களத்தில் இறங்கி திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.

Advertisment
Advertisements

WhatsApp Image 2025-08-16 at 12.33.57 PM

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், நெடுஞ்சாலை ரோந்து மற்றும் இருசக்கர ரோந்து பணி மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வாகனத் தணிக்கையின் முக்கியத்துவத்தையும், சந்தேக நபர்களை சோதனை செய்தும், FRS (face recognition system) App -ன் மூலம் ஒப்பீடு செய்து, ஏதேனும் முன் வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும் அறிவுரைகள் வழங்கினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: