காவலரை பணி இடை நீக்கம் செய்தது திருச்சி காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
Advertisment
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறார். மேலும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் திருச்சி காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“