திருச்சி மாநகரக் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கவாத்து பயிற்சி மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காவல்படை தலைவர் ஆகியோரின் உத்தரவின்பேரில் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு காவல் ஆணையர் ந.காமினி தலைமை வகித்தார்.
இதில், கவாத்துப் பயிற்சியும், கலவரத்தை கட்டுப்படுத்தும் கவாத்து ஒத்திகையும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களை துரிதமாக மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்டவை பயிற்சியும் நடைபெற்றது.
இதில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை காவலர்கள், காவல் அதிகாரிகள் என 730 பேர் கலந்து கொண்டு, கலவர ஒத்திகையை தத்ரூபமாக நடத்திக் காண்பித்தனர்.
இந்த ஒத்திகையின்போது, கலவரம் ஏற்பட்டால் கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி கட்டுப்படுத்த உதவும் வருண் வாகனம், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனமும் பயன்படுத்தப்பட்டது. மேலும், காயம்பட்டவா்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில், காவல் துணை ஆணையா்கள் அன்பு, செல்வகுமார், கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை), உதவி ஆணையர்கள், வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“