க.சண்முகவடிவேல்
தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களுக்கு பாஜக அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருச்சி புத்தூா் கஸ்தூரிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை, கிருஷ்ணகிரியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கட்சியின் அகில இந்திய தலைவா் ஜே.பி.நட்டா திறந்து வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, திருச்சியில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.,ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினார். அப்போது பேசிய அவர், “மக்களவைத் தோதலில் பாஜக யாருடன் கூட்டணி வைத்தாலும்திருச்சி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கும் நிலை ஏற்படும் வகையில் கோட்டையாக மாற்ற வேண்டும்.
அதற்கு கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். கடந்த 45 ஆண்டு கால அரசியலில் தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கு குறிப்பிடத் தகுந்த வளா்ச்சி கிடைத்திருப்பதை நேரில் உணர முடிகிறது. ஒவ்வொரு உறுப்பினரும் உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும்” என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், கட்சியின், மாநிலப் பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம், மாவட்ட பாா்வையாளா் இல. கண்ணன், மாவட்டத் தலைவா்கள் ஆா். அஞ்சாநெஞ்சன், எஸ். ராஜசேகரன், ஜெய கர்ணா, மாநில நிர்வாகிகள் எஸ். பி. சரவணன், கண்ணன், உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil