திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி

திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது; எதிர்காலத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பும் தொடங்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்

திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது; எதிர்காலத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பும் தொடங்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ponmalai workshop

திருச்சி பொன்மலையில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், உதகை மலை ரயில் போன்ற ரயில்களுக்கு பிரத்யேகமாக ரயில் பெட்டிகளும் வடிமைக்கப்படுகின்றன. இவை தவிர சரக்கு வேகன்கள் உற்பத்தியில் இப்பணிமனை சிறப்பிடம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்த நீராவி ரயில் என்ஜின்களை பழுது நீக்குவதில் பொன்மலை பணிமனை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisment

பொன்மலை பணிமனையில் சிறப்புகளை வைத்து மத்திய அரசு, தேசிய அளவிலான சிறந்த ரயில்வே பணிமனைக்கான விருதை கடந்தாண்டு பொன்மலை பணிமனைக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய ரயில்வே துறையில் நவீன வளர்ச்சியாக கருதப்படும் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பணிமனையின் அலுவலர்கள் கூறுகையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், வந்தே பாரத் ரயில்களை பராமரிக்க ரயில்வே அனுமதியளித்திருப்பது பெருமையளிக்கிறது. இதையடுத்து, ரயில்கள் பணிமனையில் நுழைவதற்கான பிரத்யேக பாதைகள் (பிட் லைன்கள்) 2 அமைக்கப்படும். தொடர்ந்து அவற்றுக்கான உள் கட்டமைப்பு பணிகளும் நடைபெறவுள்ளன. அதன்பிறகே வந்தே பாரத் ரயில்களின் பராமரிப்பு பணிகள் இங்கு தொடங்கும். எதிர்காலத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பும் பொன்மலையில் தொடங்கவும் வாய்ப்புள்ளது என்றனர்.

Advertisment
Advertisements

திருச்சி மார்க்கத்தில் தற்போது, சென்னை- நாகர்கோவில் இடையிலும், சென்னை- நெல்லை இடையிலும், மதுரை- திருச்சி- பெங்களூரு இடையிலும் என 3 மார்க்கங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பராமரிப்புப் பணிகள் திருச்சி பொன்மலையில் முதல் கட்டமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க.சண்முகவடிவேல்

Trichy Indian Railways

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: